கீழ்பென்னாத்தூரில் விவசாயிகள் 10-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை முன்னிட்டு டிராக்டர்களுடன் பேரணி நடந்தது.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் திருவண்ணாமலை மாவட்டம் சார்பில் கீழ்பென்னாத்தூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் எதிரில் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கடந்த 5-ந் தேதி முதல் 250-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று 10-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடந்தது. சுற்றுப்புற ஊர்களில் இருந்து விவசாயிகள் உழவுக்கு பயன்படுத்தி வரும் 30-க்கும் மேற்பட்ட டிராக்டர்களுடன் பேரணியாக போராட்டத்தில் கலந்து கொள்ள வந்தனர்.
கீழ்பென்னாத்தூர் சந்தை மேட்டில் இருந்து தொடங்கிய டிராக்டர் பேரணி முக்கிய சாலைகள் வழியாக சென்று காத்திருப்பு போராட்டம் நடக்கும் இடத்தை அடைந்தது.
அப்போது மாவட்ட அவைத்தலைவர் குணசேகரன், மாவட்ட செயலாளர் ஏழுமலை, கீழ்பென்னாத்தூர் ஒன்றிய செயலாளர் கேசவன் என்ற கோபி, கொள்கை பரப்பு செயலாளர் முனிராஜன், அமைப்பு செயலாளர் நடராஜன், தன்னார்வலர்கள் பலராமன், குமார் என்ற கிருஷ்ணராஜ், கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
NEWS EDITOR : RP