நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 20-ந்தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. குறிப்பாக 21 மசோதாக்களை அறிமுகம் செய்ய பட்டியலிடப்பட்டு உள்ளதாக மக்களவை செயலகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
அந்தவகையில் டெல்லி அதிகாரம் தொடர்பான அவசர சட்டம், டிஜிட்டல் தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதா, வன பாதுகாப்பு திருத்த மசோதா போன்ற முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன. இவற்றை தவிர தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை மசோதா, ஜன விஸ்வாஸ் (திருத்தம்) மசோதா, கூட்டுறவு சங்கங்கள் (திருத்தம்) மசோதா உள்ளிட்ட மசோதாக்களும் தாக்கல் செய்யப்படும் என மக்களவை செயலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
NEWS EDITOR : RP
Please follow and like us: