சென்னையில் உள்ள 14 அமுதம் பல்பொருள் அங்காடிகள் மற்றும் அமுதம் நியாய விலைக் கடைகளில், நாளை முதல் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் தக்காளி கொள்முதல் விலைக்கு விற்பனை செய்ய உணவுத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
அதில் தக்காளி 1கிலோ ரூ.60க்கும், துவரம் பருப்பு 500 கிராம் ரூ.75க்கும், உளுத்தம் பருப்பு 500 கிராம் ரூ.60க்கும் விற்பனை செய்ய உணவுத்துறை திட்டமிட்டுள்ளது. பொது மக்களின் நலன் கருதி உணவுத்துறை சார்பில் கொள்முதல் விலைக்கு நாளை முதல் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
NEWS EDITOR : RP
Please follow and like us: