ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை இந்தியாவில் ஃபாக்ஸ்கான், பெகாட்ரான், விஸ்ட்ரான் ஆகிய மூன்று வெளிநாட்டு நிறுவனங்கள் அசெம்பிள் செய்கின்றன. டாடா குழுமம் இந்தியாவில் ஆப்பிள் போன்களை அசெம்பிள் செய்யும் ஆலை அமைக்க சமீபகாலமாக விருப்பம் தெரிவித்து வந்தது.
இந்நிலையில், அக்குழுமம் விஸ்ட்ரான் நிறுவனத்தை வாங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக விஸ்ட்ரான் நிறுவனத்துடன் டாடா குழுமம்இறுதிகட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது என்றும் ஆகஸ்ட் மாதத்தில் இந்த ஒப்பந்தம் இறுதியாக வாய்ப்புள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடகாவில் விஸ்ட்ரான் நிறுவனத்தின் ஆலை உள்ளது. அந்த ஆலையில் 10 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். நடப்பு நிதி ஆண்டில் விஸ்ட்ரான் நிறுவனம் ரூ.14,700 கோடி மதிப்பில் ஐபோன் 14 மாடல்களை அசெம்பிள் செய்ய திட்டமிட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் நிறைவேறும்பட்சத்தில் உள்நாட்டில் ஐபோனை அசெம்பிள் செய்யும் முதல் இந்திய நிறுவனமாக டாடா குழுமம் விளங்கும்.
NEWS EDITOR : RP