திருவண்ணமலை தாலுகா நூக்காம்பாடி கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார் மனைவி தீபா (வயது 28). நிறைமாத கர்ப்பிணியான தீபாவிற்கு நேற்று காலை பிரசவ வலி ஏற்பட்டது. அவரை குடும்பத்தினர் 108 ஆம்புலன்சில்அழைத்துச்சென்றனர்.
பின்னர் மருத்துவ உதவியாளர் செல்வி ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்தார். அதில் தீபாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்பு தாயும், சேயும் பத்திரமாக மங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது தாயும் குழந்தையும் நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
ஆம்புலன்சில் சென்றபோது தீபாவுக்கு பிரசவ வலி நூக்கம்பாடியில் இருந்து மங்கலம் வழியே சென்று கொண்டிருந்தபோது தீபாவிற்கு பிரசவ வலி அதிகரிக்கவே உடனடியாக மருத்துவ உதவியாளர் செல்வி ஆம்புலன்சை ஓரமாக நிறுத்த டிரைவர் தினகரனுக்கு அறிவுறுத்தினார்.
NEWS EDITOR : RP