நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் 13-வது வார்டு தி.மு.க. பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தி.மு.க. கவுன்சிலர் தேவிபிரியா, கணவர் அருண்லால், மகள் 3 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தாய், தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில், 18 வயது மகள் விஷம் அருந்தி தற்கொலை செய்துள்ளார்.
பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தி.மு.க. பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாமக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் 3 பேரின் உடல்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
NEWS EDITOR : RP