பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சுக்வீந்தர் சிங் அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ஒரு கூரியர் நிறுவனத்தில் பார்சல் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த பார்சலை கனடா நாட்டில் உள்ள வீரேந்தர் சிங் என்பவருக்கு அனுப்பும்படி தெரிவித்து அதற்கான பணத்தையும் கொடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து நேற்று அந்த பார்சலை கூரியர் நிறுவன ஊழியர்கள் சோதனை செய்துள்ளனர். அப்போது, அந்த பார்சலில் சந்தேகிக்கும் வகையில் சிறிய பார்சல்கள் இருந்தன. இதனை தொடர்ந்து உடனடியாக சுங்கத்துறை அதிகாரிகள் தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சுங்கத்துறை அதிகாரி முன்னிலையில் பார்சர் திறக்கப்பட்டது.
அப்போது அந்த பர்சலில் ஆயுர்வேத மருத்து, ஆடை, திண்பண்டங்களுடன் சேர்த்து சிறிய பார்சலில் போதைப்பொருள் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து பார்சலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 44 கிராம் போதைப்பொருளை கைப்பற்றிய அதிகாரிகள் பார்சல் அனுப்பிய சுக்வீந்தர் சிங்கை கைது செய்தனர்.
NEWS EDITOR : RP