தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை பற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆலோசனை நடத்துகிறார். சென்னையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மண்டல ஐ.ஜி.க்கள் உள்ளிட்டோரும் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.
டி.ஜி.பி.யாக சங்கர் ஜிவால், கமிஷனராக சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் பொறுப்பேற்ற பின்னர் நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும்.
இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சட்டம்-ஒழுங்கு நிலை பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது. மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை சிறப்பாக பராமரிப்பது, குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட காவல்துறை சார்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்து கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது. மேலும் காவல்துறையினரின் பிரச்சினைகள் தொடர்பான தீர்வுகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
NEWS EDITOR : RP