டெல்லி, இமாச்சலப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம், உத்தரகாண்ட், காஷ்மீர் உள்ளிட்ட வடமாநிலங்களில் கனமழை பெய்துவருகிறது. மலைப் பிரதேசமான இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த ஆறு நாள்களாகப் பெய்துவரும் கனமழையால் அம்மாநிலத்தின் பல பகுதிகளில் நீர்நிலைகளின் நீர்மட்டம் உயர்ந்த நிலையில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
சிம்லா, குலு, மணாலி, மண்டி உள்ளிட்ட 13 பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. ஒன்பது இடங்களில் காட்டாற்று வெள்ளத்தில் வாகனங்கள், வீடுகள், உடைமைகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. சில இடங்களில் பாலங்கள் ஆற்றில் மூழ்கியுள்ளன. மண்டி மாவட்டத்தில் பீஸ் நதியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஆத் – பஞ்சரை இணைக்கும் பாலம் அடித்துச் செல்லப்பட்டது.
சிம்லாவில் வீடு இடிந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரும், குலு, சம்பா பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் இரண்டு பேரும் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், அடுத்த 24 மணி நேரத்துக்கு இமாச்சலப் பிரதேசத்தின் ஏழு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “இமாச்சலப் பிரதேசத்தில் பெய்து வரும் பருவ மழையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் கவலையளிக்கிறது. மாநிலத்தில் இருந்து வரும் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான காட்சிகள் வருத்தம் அளிக்கின்றன. இமாச்சல பிரதேசத்திற்கு தேவையான உதவிகள் அனைத்தும் செய்யப்படும்.
NEWS EDITOR : RP