‘ஜவான்’ படத்தின் முன்னோட்டத்தை (Prevue)இன்று (ஜூலை 10) காலை 10.30 மணிக்கு படக்குழு வெளியிட்டது. ‘பிகில்’ படத்துக்குப் பிறகு அட்லீ இயக்கி வரும் ‘ஜவான்’ படத்தில் ஷாருக்கான் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இதில் நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மேலும், தீபிகா படுகோன், சஞ்சய் தத் ஆகியோர் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படம் வரும் செப்டம்பர் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.இது தொடர்பான அறிவிப்பை நடிகர் விஜய் சேதுபதி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியிருந்தார்.
தற்போது வெளியாகியிருக்கும் முன்னோட்டத்தில் நயன்தாரா, விஜய்சேதுபதி, தீபிகா படுகோன், மற்றும் பிரியாமணி உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர். ராணுவத்தினை கதைகளமாகக்கொண்ட திரைப்படமாக உருவாகி இருக்கும் ஜவான் திரைப்படம் ஆக்ஷன் ரசிகர்களுக்கு விருந்தாக அமைய இருக்கிறது. தற்போது வரை ஜவான் திரைப்படத்தின் முன்னோட்டத்தை 1கோடியே 10 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.
இந்நிலையில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் ஜவான் திரைப்படக்குழுவிற்கு தனது வாழ்த்துக்களை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் “மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது … முழு குழுவிற்கும் வாழ்த்துக்கள்” எனக்குறிப்பிட்டிருந்தார்.
NEWS EDITOR : RP