ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் பல்வேறு காரணங்களுக்காக அடிக்கடி தலைப்புச் செய்திகளில் வருவது சமீபகாலமாக வழக்கமாகிவிட்டது. சில சமயங்களில், சமூக ஊடகங்களில் சில பதிவுகளுக்கு அவர் என்ன ரியாக் ஷன் கொடுக்கப்போகிறார் என்பதை பார்ப்பதற்காகவே தனி ரசிகர் பட்டாளம் அவருக்கென்று உண்டு. அந்த வரிசையில் தற்போது “பேபி எலான்” என்ற தலைப்புடன் வெளியாகியுள்ள எலான் மஸ்க்கின் சிறுவயது புகைப்படத்திற்கு அவர் கொடுத்துள்ள எதிர்வினை இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
K10 என்ற பெயரில் இயங்கும் ட்விட்டர் பயனர் ஒருவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படத்தில், ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் மிகவும் சுட்டித்தனமான குழந்தை முகத்தோடு, கண்களில் பளபளப்புடன் சிரித்துக்கொண்டே இருப்பது போல் தோன்றுகிறார். இந்த புகைப்படம் எடுக்கப்பட்டபோது, மாஸ்க்கிற்கு 7 முதல் 12 மாதங்கள் வரை தான் வயதிருக்கும். “கார் ஃபார்ட்டின் கண்டுபிடிப்பாளராகி, செவ்வாய் கிரகத்தை இலக்காகக் கொண்டு, எலக்ட்ரிக் கார்களை உலகெங்கிலும் உள்ள சாலைகளில் பார்க்கும் அன்றாடக் காட்சியாக மாற்றும் குழந்தை.. எலான் பேபி” என்ற தலைப்புடன் ட்விட்டரில் இந்த புகைப்படம் பகிரப்பட்டதற்கு, பதிலளிக்கும் விதமாக எலான் மஸ்க் “நான் பைத்தியக்காரத்தனமாகத் தெரிகிறேன்” என ரீட்விட் செய்துள்ளார்.
NEWS EDITOR : RP