காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் அரியானாவில் விவசாய பணிகளில் ஈடுபட்டிருந்த விவசாயிகளை திடீரென சந்தித்தார். அவர்களுடன் நாற்று நட்டு, டிராக்டர் ஓட்டி சில மணித்துளிகளை செலவிட்டார். இந்த புகைப்படங்கள் நாடு முழுவதும் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்து இருந்தன. ஆனால் ராகுல் காந்தியின் இந்த செயலை அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா கிண்டல் செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘இளவரசரின் (ராகுல் காந்தி) இந்த திடீர் ஆசையும், விரக்தியும் நிஜமாகிவிடுவது நகைப்பிற்குரியது! ஆனால் உங்களின் புகைப்படம் மற்றும் வீடியோ ஆர்வத்தில் எங்கள் அன்னதாதாக்களின் (விவசாயிகள்) கண்ணியத்தை இழிவுபடுத்தாதீர்கள்’ என சாடியுள்ளார். விவசாயிகளை ‘விவசாயி’ என்று காட்டிக்கொள்வது வருத்தத்துக்குரியது எனக்கூறியுள்ள ஹிமந்தா பிஸ்வா சர்மா, நடிப்பை விட்டு நிஜத்துக்கு வாருங்கள் என்றும் கூறியுள்ளார்.
NEWS EDITOR : RP