தமிழில் நடிகர் விஜய்யை வைத்து தெறி , மெர்சல், பிகில் என மூன்று சூப்பர் ஹிட் படங்களைத் தந்த அட்லி, தற்போது பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமான ஷாருக்கான் உடன் இணைந்து ஜவான் என்ற படத்தினை இயக்கி வருகிறார். இதன் மூலம் பாலிவுட் திரைத்துறையில் இயக்குநர் அட்லி அறிமுகமாகிறார்.
தற்போது, இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. செப்.7 ஆம் தேதி ஜவான் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் இதன் ஓடிடி விற்பனை , இசை மற்றும் திரையரங்க வெளியீட்டு உரிமம் ஆகியவை ரூ.400 கோடிக்கும் மேல் விற்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. இதன் காரணமாக, இந்தாண்டின் மிகப்பெரிய படமாக ஜவான் உருவெடுத்துள்ளது.
சமீபத்தில் இப்படத்தின் இசை உரிமத்தை டீ – சீரியஸ் நிறுவனம் ரூ.36 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியானது.
NEWS EDITOR : RP