செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த ஆசிரியர் நகர் 2-வது தெருவில் வசித்து வந்தவர் ஆரோக்கியசாமி (வயது 65). இவர் நேற்று முன்தினம் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இறந்து விட்டார்.
அவரது இறப்பை தாங்க முடியாத அவரது மனைவி லட்சுமி (58) மிகுந்த மனவருத்தத்துடன் இருந்து வந்தார். நேற்று மாலை அவரது வீட்டின் 3-வது மாடியில் இருந்து லட்சுமி கீழே குதித்தார். அப்போது வீட்டின் எதிரே இருந்த கேட்டில் லட்சுமி சிக்கிய படி ரத்த வெள்ளத்தில் இருந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் லட்சுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
NEWS EDITOR : RP
Please follow and like us: