உணவில் முக்கிய அங்கம் வகிக்கும் தக்காளி ஒரு கிலோ ரூ.100-க்கு விற்பனையானதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர். இன்னும் சில நாட்கள் விலையேற்றம் இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில் நேற்று தக்காளி விலை சற்று குறைந்துள்ளது. பிற காய்கறிகளின் விலை அதே நிலையில்தான் உள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் காய்கறிகள் மொத்த விலை குறித்து காய்கறி வணிகர் சங்க தலைவர் வாசு கூறுகையில், ”வேலூர் நேதாஜி மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைவால் விலை உயர்ந்து காணப்பட்டது. தற்போது தக்காளி விலை சற்று குறைந்துள்ளது. மொத்த விலையில் ஒரு கிலோ ரூ.80 முதல் ரூ.90 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலையில் இருந்து சில்லரை காய்கறி கடைகளில் சற்று கூடுதல் விலைக்கு தக்காளி விற்பனை செய்கின்றனர்.
சின்னவெங்காயம் ரூ.80 முதல் ரூ.100 வரையும், பீன்ஸ் ரூ.80 முதல் ரூ.90 வரையும், பச்சை மிளகாய் ரூ.90 முதல் ரூ.100 வரையும், இஞ்சி ரூ.280 முதல் ரூ.300 வரையும், பூண்டு ரூ.120 முதல் ரூ.140 வரையும் விற்பனையாகிறது” என்றார்.
NEWS EDITOR : RP