மதுரையில் காவல்துறையினரின் மனஅழுத்தத்தைப் போக்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது, தமிழக காவல்துறை டி.ஜி.பி. சங்கர் ஜிவால் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மதுரை, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், உரிய காரணங்களோடு விடுமுறை கேட்கும் காவலர்களுக்கு உடனடியாக விடுப்பு வழங்க வேண்டும் என்றும், பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு உணவு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் சங்கர் ஜிவால் அறிவுறுத்தினார்.
NEWS EDITOR : RP
Please follow and like us: