திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை அடுத்த பூளவாடி கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித். இவர் சிறு வயது முதலே ரஜினியின் தீவிர ரசிகர். இவரது தந்தை மந்தராசலம் களிமண் சிற்பம் தயாரிப்பவர். இதனால் தனது விருப்ப நடிகரான ரஜினியின் உருவத்தை முதன் முதலில் சிற்பமாக செய்து பழகி வந்துள்ளார்.
பின்னர் ஏராளமான ரஜினி பொம்மைகளை செய்து களிமண் உருவ சிற்பத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார். தற்பொழுது மண்பாண்டங்கள் செய்து விற்பனை செய்து வருகிறார். என்றாலும் அவ்வப்பொழுது ரஜினியின் சிலைகளை களிமண்ணால் செய்து வருகிறார்.இந்நிலையில், நடிகர் ரஜினி லால் சலாம் திரைப்படத்தில் மொய்தீன் பாய் என்ற வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில் அந்த புகைப்படத்தை கொண்டு களிமண்ணில் சிற்பமாக வடித்துள்ளார். இது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
NEWS EDITOR : RP