மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் தமிழக கல்வித்துறை மேம்பாட்டிற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
“அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் அமெரிக்கப் பயணத்தின்போது, ஊரகப் பகுதி மாணவர்களுக்கு உலகத்தரத்திலான தொழில்நுட்பக் கல்வி அறிமுகத்தை வழங்க மைக்ரோசாப்ட்-உடன் இணைந்து தமிழ்நாடு கல்வித்துறை மேம்பாட்டிற்காக மேற்கொள்ளும் முன்முயற்சிகளைப் பற்றி என்னிடம் தொலைபேசியில் தெரிவித்தார்.
தமிழர்களின் இதயத்துடிப்பான கல்வியை உலகத்தரத்திற்கு உயர்த்துவதே நமது திராவிட மாடல் அரசின் இலக்கு. அதற்கான பணிகளில் ஈடுபடும் அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் அதிகாரிகளுக்கும் என்னுடைய பாராட்டுகள்!
NEWS EDITOR : RP
Please follow and like us: