திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்தவர் இயக்குநர் விக்னேஷ் சிவன். இவர்து தந்தை சிவக்கொழுந்து. இவருடன் உடன் பிறந்தவர்கள் 9 பேர். இதில் விக்னேஷ் சிவனின் பெரியப்பா மாணிக்கம் லால்குடியில் தனது மனைவி பிரேமாவுடன் வசித்து வருகிறார். சித்தப்பா குஞ்சிதபாதம் தனது மனைவி சரோஜாவுடன கோயமுத்தூரில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் குஞ்சிதபாதம் மற்றும் மாணிக்கம் ஆகிய இருவரும் லால்குடி காவல்துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளனர். அதில் விக்னேஷ் சிவனின் தந்தை சிவக்கொழுத்து பொதுச்சொத்தை ஏமாற்றி விற்பனை செய்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
எங்களுக்கு தெரியாமல் மோசடியாக சொத்தை விற்பனை செய்த சிவக்கொழுந்து, அவரின் மனைவி மீனாகுமாரி மகன் விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதி மற்றும் மகள் ஐஸ்வர்யா ஆகியோர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து நிலத்தை மீட்டு தர வேண்டும் என மனுவில் கேட்டுக்கொண்டுள்ளனர்.
NEWS EDITOR : RP