கோவை சரக டிஐஜியாக கடந்த ஜனவரி மாதம் விஜயகுமார் நியமிக்கப்பட்டு இருந்தார். இவர் இதற்கு முன்னர் காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பொறுப்பில் இருந்தார்.
இந்நிலையில் இன்று அதிகாலை கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அவரது உடல் உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. விஜயகுமார் இ.கா.ப., அவர்கள் இன்று அகால மரணம் அடைந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன்.
திரு. விஜயகுமார் அவர்கள் தனது பனிக்காலத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணிப் பொறுப்புகளில் சிறப்பாகப் பணியாற்றி தமிழ்நாடு காவல்துறைக்குப் பெருமை சேர்த்தவர். அவருடைய இந்த மரணம் தமிழ்நாடு காவல் துறைக்குப் பேரிழப்பாகும்.
அவருடைய குடும்பத்தாருக்கும் காவல்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
NEWS EDITOR : RP