இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் லியோ. இப்படத்தினுடைய பர்ஸ்ட் சிங்கிள் ஆன ‘நா ரெடி’ பாடலானது தளபதியின் பிறந்தநாள் ஸ்பெஷலாக கடந்த ஜூன் 22-ஆம் தேதி வெளியானது. இப்பாடல் ஆனது வெளியான நாள் முதலே சிறந்த வரவேற்பை பெற்று வருவது மட்டுமில்லாமல் சில விமர்சனங்களையும் சந்தித்து வருகின்றது.தற்போது லியோ பட பாடலுக்கு எதிராக சென்னை காவல்துறை ஆணையரிடம் பலரும் புகார் அளித்து வரும் நிலையில், அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் தலைவர் ராஜேஸ்வரி பிரியாவும் இன்று டி.ஜி.பி அலுவலகத்திற்கு சென்று புகார் மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தின் பாடல் வெளியாகி சமூகவலைத்தளங்களில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த பாடலில் இளைஞர்களை சிகரெட் மற்றும் மது பழக்கத்திற்கு அடிமையாக்கும் வரிகள் மற்றும் காட்சிகள் உள்ளதாக தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தேன். அதற்கு நடிகர் விஜயின் ரசிகற்கள் ஆபசமாகவும், அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலும் கருத்துகளை பதிவிட்டுள்ளனர். நடிகர் விஜய் தன்னுடைய ரசிகர்களுக்கு காசு கொடுத்து இது போன்ற காரியங்களில் ஈடுபட வைத்துள்ளார். அதனால் நடிகர் விஜயை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறினார்.
அதற்கு நடிகர் விஜய் தான் அவரது ரசிகர்களுக்கு காசு கொடுத்து பதிவு போட வைத்ததற்கான ஆதாரம் எங்கே? என்று செய்தியாளர்கள் கேட்டபோது, அதனை காவல்துறையினர் தான் கண்டறிந்து ஆதாரத்தை திரட்டி கைது செய்ய வேண்டும் என கூறிய அவரிடம், மீண்டும் நடிகர் விஜய் கைது செய்வதற்கு என்ன மூகாந்திரம் இருக்கிறது? விஜய் குறித்து புகார் அளித்து விளம்பரம் தேடி கொள்கீறீர்களா? என அடுக்கடுக்காக செய்தியாளர்கள் கேள்விகளை எழுப்ப,அவர்கள் கேட்ட எந்த கேள்விக்கும் பதிலளிக்க முடியாமல் ராஜேஸ்வரி பிரியா பத்திரிகையாளர் சந்திப்பை நிறுத்திவிட்டு பாதியிலேயே கிளம்பிச் சென்றார்.
NEWS EDITOR : RP