நடிகரும் இசையமைப்பாளருமான ‘ஹிப்ஹாப் தமிழா’ஆதி நடித்துள்ள படம் ‘வீரன்’. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை ‘மரகதநாணயம்’ படத்தை இயக்கிய ஏ.ஆர்.கே சரவணன் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதியுடன்,வினய், ஆதிரா ராஜ், முனீஸ் காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், ஹிப்ஹாப் தமிழா ஆதியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியது. இதற்கு பெருத்த வரவேற்பும் ரசிகர்கள் மத்தியில் கிடைத்திருந்தது. குறிப்பாக சூப்பர் ஹீரோ கெட் அப்பில் செம்ம மாஸாக இருக்கும் ஹிப்ஹாப் ஆதியின் புகைப்படத்துடன் கூடிய அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. தொடர்ந்து இப்படத்தில் இடம்பெற்ற ’தண்டர்காரன்’ பாடலும், ‘பப்பர மிட்டாய்’ பாடலும் வெளியாகி கவனம் ஈர்த்தது. அத்துடன் ட்ரெய்லரரும் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் ஜூன் 2 ஆம் தேதி வெளியான இப்படம் கலவையான விமரிசனங்களை பெற்றது. இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். வீரன் திரைப்படம் ஜூன் 30 ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்நிலையில், இப்படம் ஓடிடி தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட வரிசையில் இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
NEWS EDITOR : RP