மெக்சிக்கோ நாட்டில் பூர்வகுடி மக்களிடையே முதலையை திருமணம் செய்யும் வழக்கம் 230 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது. முதலையை பெண் கடவுளாக அவர்கள் நம்புகின்றனர். முதலையை திருமணம் செய்வதன் மூலம் நல்ல காரியம் நடக்கும் என்றும், தெய்வீக நிலைய அடையலாம் என அவர்கள் கருதுகின்றனர்.
இந்நிலையில் சான் பெட்ரோ ஹுவாமெலூலா என்ற சிறிய நகரின் மேயர் விக்டா் ஹியூகோ சோசா, முதலை ஒன்றை திருமணம் செய்து கொண்டார். 7 வயதான அந்த முதலைக்கு குட்டி இளவரசி என பெயரிடப்பட்டுள்ளது.
நாங்கள் ஒருவரையொருவர் நேசிக்கிறோம். அதுதான் முக்கியம். காதல் இல்லாமல் திருமணம் செய்து கொள்ள முடியாது. நான் இளவரசி பெண்ணை திருமணம் செய்துகொள்கிறேன்,” என்று சடங்கின் போது மேயர் சோசா கூறினார்.திருமண விழாவிற்கு முன், முதலை வீட்டிற்கு அழைத்துச் செல்லப்படுகிறது. விருந்தினர்கள் முதலையை கையில் பிடித்து எடுத்து நடனமாடுகின்றனர். திருமணத்திற்கு முந்தைய அசம்பாவிதங்களைத் தவிர்க்க முதலையின் வாய், மூக்கு மூடப்பட்டிருக்கும்.
NEWS EDITOR : RP