கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் ‘சலார்’ படத்தையும் தயாரிக்கிறது. இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடிக்கிறார். இப்படம் வருகிற செப்டம்பர் 28-ம் தேதி வெளியாகவுள்ளது. ‘சலார்’ படக்குழுவினருக்கு நடிகர் பிரபாஸ் தலா ரூ. 10,000 அன்பளிப்பாக கொடுத்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில் ‘சலார்’ படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இந்த படத்தின் டீசர் ஜூலை 6-ம் தேதி காலை 5.12 மணிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
NEWS EDITOR : RP
Please follow and like us: