பெங்களூரு-தார்வார் இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலுக்கு ஜவுளி தொழில் அதிபர்கள், வியாபாரிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் தார்வாரில் இருந்து வந்தே பாரத் ரெயில் பெங்களூரு நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது தாவணகெரே (மாவட்டம்) கலெக்டர் அலுவலகம் அருகே ஜி.எம்.ஐ.டி. வளாகம் பின்புறம் ரெயில் வந்த போது மர்மநபர்கள் வந்தே பாரத் ரெயில் மீது கல்வீசி தாக்கியுள்ளனர். இந்த கல்வீச்சி சம்பவத்தில் ரெயிலின் சி-4 பெட்டியின் ஜன்னல் கண்ணாடி நொறுங்கியது. அதாவது ஜன்னலின் வெளிப்புற மேற்பரப்பில் சேதம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதே வேளையில் அந்த ரெயில்சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அந்த ரெயில் பெங்களூருவுக்கு வந்தடைந்தது.
NEWS EDITOR : RP