சாலைகளில் வாகனங்களில் செல்லும் போது ட்ராபிக்கை பார்த்தவுடன் அப்படியே பறந்து சென்று விட ஒரு வாய்ப்பு கிடைக்காதா என பலர் யோசித்திருப்பர். இதற்கு எந்த நாட்டு வாகன ஓட்டியாக இருந்தாலும் அவருக்கு விதிவிலக்கு இல்லை. பலரின் இந்த Mind Voice அமெரிக்காவின் அலெஃப் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திற்கு கேட்டிருக்கும் போல, உடனே பறக்கும் காரை உருவாக்கிவிட்டார்கள்.
அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷனிடம்(FAA) அலெஃப் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் பறக்கும் காருக்கு சட்டப்பூர்வ அனுமதி வேண்டியும் விண்ணப்பித்திருக்கிறது
இந்நிலையில், அலெஃப் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட பறக்கும் காரை, பயணிகள் போக்குவரத்திற்கு அனுமதிக்க அமெரிக்க அரசு சட்டப்பூர்வ அனுமதி வழங்கியுள்ளது. இதன்மூலம் உலகிலேயே முதன்முறையாக பறக்கும் மின்சார காருக்கு சட்டப்பூர்வ அனுமதிப்பெற்ற பெருமையை அலெஃப் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
இந்த பறக்கும் மின்சார காரில் இரண்டு பேர் பயணிக்கலாம். சாலையில் செல்லும் போது, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டாலோ, விபத்து ஏற்பட்ட இடங்களில் நெரிசல் ஏற்பட்டாலோ இக்காரால் பறக்க முடியும். ஆனால் இந்த கார் சாலையில் மணிக்கு 25 கி.மீ வேகத்தில் மட்டுமே செல்லும். இந்நிலையில், 2025-ஆம் ஆண்டு இறுதிக்குள் வாடிக்கையாளர்களுக்கு பறக்கும் கார்களை வழங்க அந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. இந்த காரின் விலை இந்திய ரூபாய் மதிப்பில் தோராயமாக ரூ.2.46 கோடி என கணிக்கப்பட்டுள்ளது.
NEWS EDITOR : RP