தேனி, பெரியகுளத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பெயரில் பெரியகுளம் வடகரை காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அதே நேரத்தில் போலீசார் பெரியகுளம் கும்பக்கரை சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த வாசுதேவன் (43) என்பவரை பிடித்து விசாரணை செய்தபோது விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
அவரிடம் இருந்து போலீசார் ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அதே போல் எண்டபுளி ஊராட்சியில் முருகமலை சாலையில் சந்தேகப்படும்படி நின்ற அழகர் (41) என்வரிடம் போலீசார் விசாரணை செய்தபோது அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவரையும் வடகரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
NEWS EDITOR : RP