நடிகர் விஜய்-ன் பிறந்தநாளை கொண்டாடிய அவரது ரசிகர்கள், பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில், உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு இலவச பெட்ரோல், இலவச மதிய உணவு, இலவச ஆட்டோ பயணம், முதலானவற்றை மேற்கொண்டும், பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
இந்நிலையில், தனது பிறந்தநாள் அன்று, நலத்திட்ட உதவிகள் வழங்கிய மக்கள் இயக்க நிர்வாகிகளை பாராட்டி கைப்பட கடிதம் ஒன்றை விஜய் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ”கடந்த ஜூன் 22 அன்று, எனது பிறந்தநாளில் நமது மக்கள் இயக்கம் வழியாக நீங்கள் செய்த பல்வேறு நலத்திட்ட உதவிகளை நான் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் வழியாக அறிந்தேன். உங்களின் இந்த சிறப்பான செயல்பாடுகளை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். பிரியமுடன் விஜய்” என்று எழுதியுள்ளார். இந்த கடிதம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
NEWS EDITOR : RP