காஞ்சீபுரத்தில் பட்டு சேலைகளை வாங்க ஏராளமானோர் வருகை தருவர். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் தங்கள் வீடுகளில் நடைபெறும் திருமண விசேஷங்களுக்கு பட்டு சேலைகள் வாங்க வெளி மாநிலம் வெளி மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வாகனங்களில் காஞ்சீபுரத்தில் குவிந்தனர்.
பட்டு ஜவுளி கடைகள் மிகுந்த காஞ்சீபுரம் காந்தி சாலை பகுதியில் காலை முதலே அதிக அளவிலானோர் வருகைதந்து பட்டு சேலைகளை வாங்கிச்சென்றனர். வாகன நிறுத்தமிடங்கள் இல்லாததால் சாலையிலேயே வாகனங்களை நிறுத்தி விட்டு சென்றனர். இதன் காரணமாக காந்தி சாலை முழுவதுமே போக்குவரத்து நெரிசலானது ஏற்பட்டு வாகனங்கள் ஊர்ந்து செல்ல கூடிய நிலை ஏற்பட்டது.
NEWS EDITOR : RP
Please follow and like us: