பள்ளி மற்றும் கல்லூரியில் கல்வி பயின்ற காலத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. நாம் என்னதான் நல்ல வேலை கிடைத்தோ அல்லது தொழிலதிபராக உயர்ந்த நிலையில் இருந்தாலும் சிறுவயதில் செய்த குறும்புகள் நம்மை அவ்வப்போது வந்து ஆனந்தப்படுத்தும். நாம் கண்டிப்பானவர் என நினைத்த ஆசிரியர் கூட பள்ளி இறுதி நாட்களில் அவர்கள் காட்டும் அன்பு ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.
அப்படி ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்துள்ளார். இன்ஸ்டாவில் ஸ்டான்பெரி என்பவர் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், வகுப்பின் இறுதி நாள். கோட் அணிந்து உள்ளே நுழைகிறார் பெண் ஆசிரியை. திடீரென தனது கோட்டை கழட்டுகிறார். மாணவர்கள் அனைவரும் கூக்குரல் எழுப்புகின்றனர்.
ஓவியங்கள் வரைந்த ஆடையை அந்த ஆசிரியை அணிந்துள்ளார். ஏற்கனவே பள்ளி இறுதி நாளை முன்னிட்டு மாணவர்கள் தனது ஆடையில் ஓவியங்கள் வரையலாம் என ஆசிரியை அறிவித்திருந்தார். இதனையடுத்து மாணவர்கள் பல்வேறு ஓவியங்களை அந்த வெண்ணிற ஆடையில் வரைந்துள்ளனர். அந்த ஆடையை அணிந்தபடி வந்து தான் அந்த ஆசிரியை இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
NEWS EDITOR : RP