“கருணாநிதி குடும்பம் என்பது தமிழ்நாடுதான்…” திருமண விழாவில் பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
அண்ணா அறிவாலயத்தில் கும்மிடிப்பூண்டி வேணு இல்லத் திருமண விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார். அப்போது குடும்ப அரசியல் என்ற பிரதமர் மோடியின் விமர்சனத்துக்கு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசினார். அவர் கூறியதாவது
இப்போதெல்லாம் நல்லது செய்வதை கூட பயந்து செய்ய வேண்டி இருக்கிறது. நல்லதை கூட ஜாக்கிரதையாக, பொறுமையாக, பலமுறை யோசித்து செய்ய வேண்டியுள்ளது. வரலாறு நிறைய பேருக்கு புரியவில்லை.
தி.மு.க. என்பது குடும்ப இயக்கம் தான், தொண்டர்களை தம்பி என அழைத்தவர் அண்ணா. தி.மு.க.விற்கு வாக்களித்தால் கருணாநிதி குடும்பம் தான் வளர்ச்சி அடையும் என்று பிரதமர் சொல்கிறார். பிரதமர் சொல்வது உண்மை தான், கருணாநிதி குடும்பம் என்பதே தமிழ்நாடு தான். திமுகவினர் அனைவரும் கருணாநிதியின் மகன் போன்றவர்கள் தான்; திமுக என்பது குடும்பம் தான்; கட்சியினரை தம்பி என அழைத்தவர் அண்ணா”
தி.மு.க. மாநாடு நடத்தும்போதெல்லாம் குடும்பம் குடும்பமாக மாநாட்டிற்கு வாருங்கள் என்று சொல்லி தான் அழைப்போம். மாநாட்டிற்கு மட்டுமல்ல, போராட்டத்திற்கும் கூட குடும்பம் குடும்பமாக மக்கள் வந்து கலந்து கொள்வது தான் தி.மு.க.
NEWS EDITOR : RP