நடிகர் அஜித்குமார் திரைத்துறையில் தனக்கென தனி அடையாளத்தையும், தனி ரசிகர் பட்டாளத்தையும் கொண்டவர். அஜித்குமார் மோட்டார் வாகன பயணம் மற்றும் துப்பாக்கி சுடுதல் போன்றவற்றில் அதிக ஈடுபாடு கொண்டவர். கடந்த சில ஆண்டுகளாகவே ஓவ்வொரு படத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் வெளிநாடுகளில் சுற்றுபயணம் மேற்கொள்கிறார்.தற்போது இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித்குமார் நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷாவும், வில்லனாக அர்ஜுன் தாஸும் நடிப்பதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், நடிகர் அஜித் குமார் வெளிநாட்டில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியான நிலையில், ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
NEWS EDITOR : RP