விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் மணிகண்டன் நடிப்பில் கடந்த மாதம் திரைக்கு வந்த குட்நைட் திரைப்படம் குடும்ப ரசிகர்களைக் கவரும் வகையில் அமைந்திருந்தது. இப்படத்திற்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. இந்த வரிசையில் புதிதாக இணைந்துள்ள படம் போர் தொழில். விக்னேஷ் ராஜா என்கிற புதுமுக இயக்குநர் இயக்கியிருக்கும் இப்படம் இரண்டு வாரங்களைக் கடந்து திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது.ராட்சசன் படத்தைப் போல் தரமான திரில்லர் படமாக உருவாகி இருக்கும் இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ரூ.5.5 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் இதுவரை ரூ.20 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் காவல் அதிகாரிகளாக அசோக் செல்வன், சரத் குமார் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த திரைப்படம் ஜூலை 7 ஆம் தேதி முதல் சோனி லைவ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
NEWS EDITOR : RP