ஐசிசி உலக கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் நடப்பு ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்த தொடர் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறும் என தெரிகிறது.
பெங்களூரு, சென்னை, டெல்லி, தர்மசாலா, கவுகாத்தி, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, இந்தூர், ராஜ்கோட், மும்பை ஆகிய நகரங்களில் போட்டிகள் நடத்த திட்டமிட்டுள்ளது. இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை பிரபலப்படுத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் இந்திய கிரிக்கெட் வாரியமும் வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக உலகக்கோப்பையை பிரத்யேக பலூனில் வைத்து அது விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. அது பூமியில் இருந்து சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் அடி உயரத்தில் பூமியின் வளிமண்டலத்தின் விளிம்பில் நிலை நிறுத்தப்பட்டது. பின்னர் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியது.
இந்நிலையில், ஐசிசி உலகக் கோப்பை 27 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இன்று தொடங்கும் பயணம் குவைத், பெஹ்ரைன், மலேசியா, அமெரிக்கா, உகாண்டா, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகளுடன், 27 முக்கிய நகரங்களுக்கு சென்று நிறைவாக செப்டம்பர் 4ஆம் தேதி இந்தியா வந்தடைகிறது.
NEWS EDITOR : RP