2 சட்டங்கள் மூலம் நாடு எவ்வாறு இயங்க முடியும்..!!

Spread the love

230 தொகுதிகளை கொண்ட மத்தியபிரதேச சட்டசபைக்கு இந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் அரசியல் கட்சிகள் தற்போதே தேர்தல், பிரசார பணிகளை தொடங்கி விட்டன.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ஒருவரை சமாதானப்படுத்தோ மற்றும் வாக்கு வங்கி அரசியலுக்கான வழியை பின்பற்றப்போவதில்லை என்று பாஜக முடிவெடுத்துள்ளது.

பொதுசிவில் சட்டம் அமல்படுத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டும் கூறுகிறது. ஆனால் வாக்கு வங்கி அரசியலுக்காக அதை சிலர் எதிர்க்கின்றனர். நாட்டில் உள்ள அனைவருக்கும் பொதுவான உரிமை குறித்து இந்திய அரசியலமைப்பும் பேசுகிறது. அரசாங்கம் திருப்திக்காக செயல்படுகிறதே தவிர சமாதானப்படுத்த அல்ல.

உங்கள் மகன்கள், மகளிகள், பேரப்பிள்ளைகளுக்கு நலத்திட்டங்கள் கிடைக்க வேண்டுமானால் பாஜகவுக்கு வாக்களியுங்கள். குடும்ப பின்னணி கொண்ட கட்சிகளுக்கு வாக்களிக்காதீர்கள். முத்தலாக்கிற்கு ஆதரவு அளிப்பவர்கள் இஸ்லாமிய மகளுக்கு அநீதி இழைக்கின்றனர். முத்தலாக் மகளுக்கு அநீதி விளைவிப்பது மட்டுமின்றி ஒட்டுமொத்த குடும்பத்தையும் சீரழிக்கிறது. முத்தலாக் இஸ்லாம் மதத்தில் இருந்து பிரிக்க முடியாது என்றால் அது ஏன் இஸ்லாமிய மதத்தினர் பெரும்பான்மையாக உள்ள எகிப்து, இந்தோனேசியா, கத்தார், ஜோர்டான், சிரியா, வங்காளதேசம், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் பின்பற்றப்படுவதில்லை?’ என்றார். பொதுசிவில் சட்டம் என்பது மதரீதியில் அல்லாமல் நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டமாகும். இந்தியாவில் தற்போது மதத்தின் அடிப்படையில் பல்வேறு சிவில் சட்டங்கள் உள்ளது. பொது சிவில் சட்டம் அனைவருக்கும் சமமான ஒரே சிவில் சட்டமாகும். அயோத்தியில் இந்து மதக்கடவுள் ராமர் வழிபாட்டு தலம், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்து வழங்கும் சட்டம் 370 ரத்து ஆகிய 2 தேர்தல் வாக்குறுதிகளுக்கு அடுத்து தேர்தலில் பாஜக அளித்த மிகப்பெரிய வாக்குறுதி பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்து என்பது குறிப்பிடத்தக்கது.

NEWS EDITOR : RP

Please follow and like us:

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp
YouTube
Instagram
Telegram