நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்கும் மேலாகியும் வீட்டில் மின்சாரம் இல்லாமல் வாழ்வதை நினைத்தால் வியப்பாக உள்ளது. இந்தநிலையில் உத்தர பிரதேச மாநில ஐபிஎஸ் அதிகாரியான அனுக்ரிதி ஷர்மா, வயதான பெண்ணின் வீட்டிற்கு மின்சாரம் கொண்டு வந்த தருணத்தின் இதயத்தைத் தூண்டும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
பல வருடங்களாக மின்சார வசதியின்றி தவித்து வந்த 70 வயது மூதாட்டி நூர்ஜஹானின் வீட்டிற்கு மின் இணைப்பை அளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த ஐபிஎஸ் அத்காரி அனுக்ரித்தி ஷர்மா.
அதுமட்டுமின்றி, காவல்துறை நிதியில் இருந்து மூதாட்டிக்கு அன்பளிப்பாக மின்விசிறியும் வழங்கப்பட்டது.
NEWS EDITOR : RP
Please follow and like us: