செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தில் 500 ஏக்கர் பரபரப்பளவில் அணுமின் நிலையம் மற்றும் பாபா அணுஆராய்ச்சி மையம் என இரு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. கடற்கரை ஓரம் இந்த கல்பாக்கம் அணு ஆராய்ச்சி அமைந்துள்ளதால் சந்தேக நபர்கள் யாரும் அதன் உள்ளே ஊடுருவாத வண்ணம் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் 24 மணி நேரமும் கடற்கரை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவது வழக்கம். அதேபோல் அருகில் உள்ள சதுரங்கப்பட்டினம், புதுப்பட்டினம் மீனவர்களும் அணுஆராய்ச்சி மைய கடற்கரை பகுதியில் மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டு அவர்கள் படகுகளில் இங்கே வர அனுமதி கிடையாது. படகு, கப்பல்கள் வர தடை செய்யப்பட்ட கல்பாக்கம் அணுஆராய்ச்சி மைய பின்புறம் 1 கிலோ மீட்டர் தூரம் உள்ள கடலில் அவ்வழியாக செல்லும் படகுகள், கப்பல்கள், சந்தேக நபர்களின் ஊடுருவல்களையும் மற்றும் சுனாமி, புயல் சின்னம், சூறாவளிகாற்று போன்ற இயற்கை சீற்றங்களையும் கண்காணிக்க கல்பாக்கம் அணுஆராய்ச்சி மையம் சார்பில் ரூ.2½ மதிப்பில் போயா என்ற ரேடார் கருவி சங்கிலியால் பிணைத்து அமைக்கப்பட்டு இருந்தது. 30 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும் கப்பல்கள், படகுகளை கண்காணித்து படம்பிடித்து அணுஆராய்ச்சி மைய கட்டுப்பாட்டு அறைக்கு இந்த ரேடார் கருவி தகவல் அனுப்பும்.
இந்நிலையில் கடந்த இரு தினங்காக கல்பாக்கம் பகுதியில் பலத்த கடல் சீற்றம் காரணமாக கடலில் அமைக்கப்பட்டு இருந்த போயா ரேடார் கருவியின் சங்கிலி அறுந்து கடலில் அடித்து செல்லப்பட்ட அந்த ரேடார் கருவி நேற்று மாமல்லபுர கடற்ரையில் கரை ஒதுங்கியது.
NEWS EDITOR : RP