செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் உள்ள நல்லம்பாக்கம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 210 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் கூடுதல் கழிவறை கட்டிடம் கட்டி தர பள்ளி சார்பில் நல்லம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.லட்சுமணன், செங்கல்பட்டு மாவட்ட கவுன்சிலர் எம்.கஜாவிடம் ஆசிரியர்கள், பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். இதனையடுத்து 15-வது நிதிக்குழு மான்ய தூய்மை திட்டத்தின் கீழ் மாவட்ட கவுன்சிலர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 லட்சத்தில் புதிய கழிவறை கட்டிடம் பள்ளி வளாகத்தில் கட்டி முடிக்கப்பட்டு மாணவ, மாணவிகள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நல்லம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.லட்சுமணன் தலைமை தாங்கினார். துணை தலைவர் ஹேமமாலினி வாசு, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக அனைவரையும் நல்லம்பாக்கம் ஊராட்சி மன்ற செயலர் அரிகிருஷ்ணன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு மாவட்ட கவுன்சிலரும், காட்டாங்கொளத்தூர் வடக்கு அ.தி.மு.க. ஒன்றிய செயலாளருமான எம்.கஜா என்கிற கஜேந்திரன் கலந்துகொண்டு புதியதாக கட்டப்பட்ட கழிவறை கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில் ஒப்பந்ததாரர் எல்லப்பன், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள், கிராம மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
NEWS EDITOR : RP