இந்த கூட்டத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி, பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு வகைப்பட்ட 229 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைச் சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் லலிதா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் அறிவுடைநம்பி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) சாகிதா பர்வின் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
NEWS EDITOR : RP
Please follow and like us: