சாதாரண தேநீர் முதல், மசாலா தேநீர், இஞ்சி டீ, பிளாக் டீ, வைட் டீ மற்றும் ஒவ்வொரு ஊரில் அந்தந்த ஊரின் சிறப்புப் பெயரைத் தாங்கி வரும் சிறப்பு தேநீர் உட்பட பல வகை தேநீர்கள் உள்ளன. இந்த நன்கு அறியப்பட்ட தேநீர் சுவைகளை எல்லோரும் நன்கு அறிந்திருந்தாலும், நீங்கள் எப்போதாவது ஹஜ்மோலா சாயை சந்தித்திருக்கிறீர்களா? அபப்டி ஆச்சரியப்படும் விதமாக, சமீபத்தில் வாரணாசியில், தெரு வியாபாரி ஒருவர் தனித்துவமான தேநீர் கலவை தயாரிப்பதை, மற்றொரு பயனர் ஒருவர் வீடியோவாக எடுத்து, அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
அதில் அந்த வியாபாரி சர்க்கரை, இஞ்சி, புதினா மற்றும் காய்ச்சிய தேநீரை ஒன்றாகக் கலந்து விட்டு, பின்னர் ஒரு சிறிய ஹஜ்மோலா பாக்கெட்டை நசுக்கி, கலவையை தேநீரில் சேர்க்கிறார். பிறகு கடைசியில் கிளறி அதை மற்றவர்களுக்கு கொடுக்கிறார். இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் யாஷ் ஷிவ்ஹரே என்ற பயனர் பகிர்ந்துள்ளார். ஜூன் 14 அன்று பகிரப்பட்ட இந்த வீடியோவை 10,000 க்கும் மேற்பட்டவர்கள் பார்வையிட்டு லைக் செய்துள்ளனர். சிலர் இந்த பதிவிற்கு தங்களது நகைச்சுவையான மற்றும் எதிர்மறையான கருத்துகளையும் பகிர்ந்து வருகின்றனர்.
ஹஜ்மோலா மிட்டாய் மற்றும் கேப்சூல் பற்றி தெரிந்தவர்கள் ,முயற்சிக்கலாம்.. இந்த ஹஜ்மோலா அஜீரணத்தை போக்க ஒவ்வொரு உணவிற்கும் பிறகு எடுத்துக்கொள்ளப்படும் ஒன்றாகும். இது மிட்டாய் என்று அழைக்கப்பட்டாலும், ஹஜ்மோலா சற்று காரமானது மற்றும் செரிமானத்திற்கு உதவும் மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களால் தயாரிக்கப்படுகிறது.
NEWS EDITOR : RP