நடிகை, யூ டியூபர், தொகுப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் மலையாள நடிகை பேர்லே மானே. ஆரம்ப காலத்தில் தொகுப்பாளராக தனது பயணத்தை ஆரம்பித்த பேர்லே மானே பின்னர் ‘நீலகாஷம் பச்சகடல் சுவன்ன பூமி’, ‘தி லாஸ்ட் சப்பர்’, ‘டபிள் பேரல்’, ‘பிரீத்தம்’ போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.
மலையாளத்தில் மோகன்லால் தொகுத்து வழங்கிய ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 2-வது இடத்தை பிடித்தும் பிரபலமானார். இந்நிலையில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘வலிமை’ திரைப்படத்தில் கிறிஸ்டீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகிலும் பேர்லே மானே அறிமுகமானார்.
இந்நிலையில், நடிகை பேர்லே மானே வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அதோடு, யூ டியூபர்கள் சுஜித் பக்தன், ஜெயராஜ் ஆகியோர் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். ஆண்டுக்கு ஒரு கோடி முதல் இரண்டு கோடி வரை வருமானம் வருவதாகவும் ஆனால் வரி கட்டாமல் ஏய்ப்பு செய்வதாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுள்ளது.
இதன்படி, கொச்சி, திருவனந்தபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் யூ டியூபர்கள் வீட்டில் வரிமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
NEWS EDITOR : RP