அசாமில் பெய்து வரும் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு பாதிப்பு மேலும் கடுமை அடைந்துள்ளது. தொடர்ந்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை கொட்டி தீர்த்தது. இதனால் மேலும் பல புதிய பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது.
அசாம் வெள்ளப்பெருக்கால் 16 மாவட்டங்களை சேர்ந்த 4.88 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் என அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. அசாமில் வெவ்வேறு பகுதிகளில் அதிக மழை பொழிவும் மற்றும் இடி, மின்னலும் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. அசாம் வானிலை ஆய்வு மையம் இன்று மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்து உள்ளது.
NEWS EDITOR : RP
Please follow and like us: