ஆந்திராவில் தெலுங்கு தேச கட்சி பொதுக்கூட்டத்தில் தலைவர்கள் பேசிக் கொண்டிருந்த போது மேடை சரிந்ததால் பரபரப்பு நிலவியது.
ஆந்திராவில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறவுள்ளது. இதனால் அங்கு தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. முக்கிய அரசியல் கட்சிகளான ஆளும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ், எதிர்க்கட்சிகளான தெலுங்கு தேசம், ஜனசேனா, பாஜக ஆகிய கட்சிகள் ஊருக்கு ஊர் மேடை போட்டு பொதுக்கூட்டங்களை நடத்தி வருகின்றன.
இந்நிலையில் ஏழூரு மாவட்டம் பாத்துலவாரிகூடம் கிராமத்தில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் நேற்று பொதுக்கூட்ட்ம நடைபெற்றது. அப்போது திடீரென பலத்த காற்று வீசியது.
காற்றின் வேகத்திற்கு தாக்குப்பிடிக்க இயலாமல் மேடை திடீரென்று சரிந்து விழுந்தது. மேடை மீது அமர்ந்திருந்த கட்சித் தலைவர்களும் கீழே விழுந்தனர். இதில் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனால் அப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
NEWS EDITOR : RP