சர்வதேச விண்வெளி நிலையத்தில் உருளைக்கிழங்கு சிப்ஸ் பொறித்த விஞ்ஞானிகள், அதன் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
பல ஆயிரம் மைல்களுக்கு மேலே பறக்கும் விண்கலம் மற்றும் விண்வெளியில் பூமியில் இருப்பதைப்போல் உணவுப்பொருள்கள் சுவையாக இருக்காது. எடையே இல்லாத சூழலில் உணவின் மணம் மூக்கிற்கு செல்ல வாய்ப்பில்லை. உணவின் சுவையில் மணம் என்பது ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் விண்வெளி வீரர்கள் வாசனையை அறிய முடியாமல் சுவையை இழக்கின்றனர்.
மேலும் விண்வெளியில் உணவு சமைப்பது ஒரு அரிதான நிகழ்வு ஆகும். விண்வெளி வீரர்கள் பொதுவாக தங்கள் பயணங்களின் போது ஏற்கனவே தயாரிக்கப்பட்ட உணவை நம்பி இருக்கின்றனர். இருப்பினும், ஒரு ஆராய்ச்சி முயற்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது: சர்வதேச விண்வெளி நிலையத்தில் உருளைக்கிழங்கு சிப்ஸ் வறுக்கும் முறையை விஞ்ஞானிகள் வெற்றிகரமாக கண்டுபிடித்துள்ளனர்.
இதுதொடர்பான வீடியோவையும் அவர்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர்.முதலில் பூஜ்ஜிய ஈர்ப்பு விசையில் வறுக்க முடியாது என நினைத்ததாகவும், பின்னர் நீண்ட முயற்சிக்கு பின் சிப்ஸ் தயாரிக்கும் முறை வெற்றி பெற்றதாக தெரிவித்துள்ளனர்.
பூமியில் தயாரிக்கும் உருளைக்கிழங்கு சிப்ஸை விட தாங்கள் தயாரித்த சிப்ஸ் மிகவும் சுவையாக உள்ளதாகவும் அவர்கள் நகைச்சுவையாக தெரிவித்துள்ளனர். அதை நாங்கள் சொல்ல வேண்டும் என சில குறும்பு சப்ஸ்கிரைப்பர்கள் பதிவிட்டுள்ளனர்.
NEWS EDITOR : RP