இந்தியா பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசுமுறை பயணமாக கடந்த செவ்வாய்கிழமை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அங்கு அவர் சர்வதேச யோகா தினம் சிறப்பு நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அமெரிக்கா நாடாளுமன்றத்திலும் சிறப்புரை ஆற்றினார்.
அமெரிக்காவில் தனது பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர், 2 நாள் பயணமாக எகிப்து புறப்பட்டு சென்றார். அங்கு அவர் எகிப்து நாட்டின் பிரதமர் அப்தெல் பதாவை சந்தித்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளார். பிரதமராக பதவி ஏற்ற பிறகு எகிப்து நாட்டிற்கு முதல் முறையாக பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
NEWS EDITOR : RP
Please follow and like us: