வங்கியின் உதவி மேலாளர் உட்பட 13 பேரை போலீசார் கைதுசெய்தனர். நீலகிரி, நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் குன்னூரில் உள்ள ஸ்டேட் பாங்க் வங்கியில் விவசாய கடன் வழங்குவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக வங்கியின் உதவி மேலாளர் உட்பட 13 பேர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2019-ஆம் ஆண்டு மத்திய அரசின் கிசான் கேஸ் கிரெடிட் திட்டத்தின் மூலம் காளாண் வளர்ப்பு மற்றும் விவசாய கடன் வழங்குவதாக கூறி மோசடி நடைபெற்றுள்ளது. 24 விவசாயிகளிடம் ஆவணங்கள் வாங்கி, அவற்றை வங்கியில் வைத்து ரூ.3.60 கோடி பணத்தை தங்களது வங்கி கணக்கில் மாற்றியுள்ளனர். வங்கி மேலாளர் மற்றும் உதவி மேலாளர் மற்றும் மேலும் ஒருவர் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இந்த குற்றம் தொடர்பாக இதுவரை வங்கியின் உதவி மேலாளர் உட்பட 13 பேரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைதுசெய்தனர். மேலும், வங்கி மேலாளர் உட்பட 11 பேர் தலைமறைவாகி உள்ளனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
NEWS EDITOR : RP