நீண்ட தூர பஸ்கள் அனைத்தும் சீர்காழி புதிய பஸ் நிலையத்திற்குள் இயக்கப்படுமா? என பயணிகள் எதிர்பார்த் துள்ளனர். மயிலாடுதுறை சீர்காழி; நீண்ட தூர பஸ்கள் அனைத்தும் சீர்காழி புதிய பஸ் நிலையத்திற்குள் இயக்கப்படுமா? என பயணிகள் எதிர்பார்த் துள்ளனர். சுற்றுலாத்தலம் சீர்காழியில் சட்டைநாதர் கோவில், தடாளன் கோவில், நாங்கூர், அண்ணன் பெருமாள் கோவில், குறவளூர், திருவாளி உள்ளிட்ட பகுதிகளில் பெருமாள் கோவில்களும், வைத்தீஸ்வரன் கோவிலில் செவ்வாய் (அங்காரகன்), திருவெண்காட்டில் புதன் தலம், கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் நாகநாதர் கோவில் உள்ளிட்ட கோவில்கள் உள்ளன. மேலும் பூம்புகார், பழையாறு, திருமுல்லைவாசல் உள்ளிட்ட இடங்களில் மீன்பிடி துறைமுகங்கள், பூம்புகார் சுற்றுலாத்தலம் ஆகியவை உள்ளன. இந்த நிலையில் மேற்கண்ட இடங்களுக்கு வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வந்து செல்லும் பக்தர்கள் சீர்காழி புதிய பஸ் நிலையத்திற்கு வந்து அங்கிருந்துதான் மேற்கண்ட இடங்களுக்கு செல்ல வேண்டும்.
இந்தநிலையில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், மதுரை, சென்னை, ராமநாதபுரம், கடலூர், புதுச்சேரி, விழுப்புரம் உள்ளிட்ட நீண்ட தூரங்களில் இருந்து வரும் பஸ்கள் சீர்காழி புதிய பஸ் நிலையத்திற்குள் வராமல் புறவழிச்சாலை வழியாக சென்று விடுகிறது. இதனால் உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள் கடும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் புறவழிச்சாலையிலேயே பயணிகளை இறக்கி விட்டு செல்வதால் அவர்கள் புதிய பஸ் நிலையத்திற்கு வர கடும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நீண்ட தூரத்தில் இருந்து வரும் அனைத்து பஸ்களும் சீர்காழி புதிய பஸ் நிலையத்திற்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் பொதுமக்கள் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
NEWS EDITOR : RP