சிஎஸ்கே அணியின் சின்ன தல என ரசிகர்களால் அழைக்கப்படும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா அனைத்து வகையான போட்டிகளிலிருந்தும் விலகிவிட்டார்.
சிஎஸ்கே அணி கோப்பையை வென்ற 4 சீசன்களிலும் சுரேஷ் ரைனாவின் பங்களிப்பு மிகப்பெரியது. இதுவரை மொத்தம் 205 ஐபிஎல் போட்டிகளில் கலந்துகொண்ட ர்ரெனா 5528 ரன்களை குவித்து ஐபிஎல் தொடரின் அனுபவம் மிக்க வீரராக கருதப்படுகிறார்.
பின் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட ரெய்னா, ஐபிஎல் தொடர்களிலும் அவர் சரியாக விளையாடவில்லை. அவரின் ஆவேசமான ஆட்டத்தை பார்க்க விரும்பிய ரசிகர்களுக்கு ஒவ்வொரு போட்டியிலும் அவரின் ஆட்டம் ஏமாற்றத்தையே தந்தது. இதனால் ஐபிஎல் தொடரில் அவரை எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை. இதற்கு அவரின் உடல் எடை கூடியதும் காரணமாக கூறப்பட்டது.
NEWS EDITOR : RP