பிலிப்பைன்ஸில் உள்ள இந்தியத் தூதரகம் கடந்த மே 26 ஆம் தேதி அன்று பிலிப்பைன்ஸ் நாட்டின் மருத்துவ உரிமத் தேர்வில் இந்திய மருத்துவப் பட்டதாரிகள் பங்கேற்க முடியுமா என்ற கேள்வியை முகநூல் பதிவு மூலமாக அந்நாட்டு PRC-யிடம் கேட்டிருந்தது. அப்போது இந்தியாவிற்கும் பிலிப்பைன்ஸிற்கும் இடையில் எந்தவிதமான பரஸ்பர உறவும் இல்லாத நிலையில், இந்திய மருத்துவப் பட்டதாரிகள் அந்த நாட்டில் நடைபெறும் உரிமத் தேர்வில் பங்கேற்க முடியாது என்பதை PRC எழுத்துப்பூர்வமாக உறுதிப்படுத்தி இருந்தது.
இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட கடிதத்தில், PRC தலைவர் சரிட்டோ ஜமோரா கூறியுள்ள தகவலின் படி கடந்த மார்ச் 30 அன்று வழங்கப்பட்ட சான்றிதழின்கீழ், பிலிப்பைன்ஸ் உயர்கல்வி ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரியில் இந்திய மருத்துவ பட்டதாரிகள் போர்டு தேர்வில் பங்கேற்கலாம் என்று தெளிவுபடுத்தி உள்ளார். இது 1959 ஆம் ஆண்டின் பிலிப்பைன்ஸ் மருத்துவச் சட்டம் மற்றும் மருத்துவ வாரியம் மற்றும் PRC இன் பிற விதிகளின்படி செல்லுபடியாகும் என்ற அவர், இந்திய மருத்துவ பட்டதாரிகள் உட்பட வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகளும் இந்த விதிமுறைகளின் தேவைகளுக்கு இணங்க மருத்துவ வாரிய தேர்வுக்கு பதிவு செய்யலாம் என தெரிவித்துள்ளார்.
NEWS EDITOR : RP