பொறையாறு அருகே நல்லாடை பகுதியில் பருத்தி செடிகளில் மாவு பூச்சி தாக்குதல் காரணமாக டிரோன் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்படுகிறது. மயிலாடுதுறை பொறையாறு; பொறையாறு அருகே நல்லாடை பகுதியில் பருத்தி செடிகளில் மாவு பூச்சி தாக்குதல் காரணமாக டிரோன் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்படுகிறது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில், பரசலூர், மேமாத்தூர், கீழ்மாத்தூர், நல்லாடை, திருவிளையாட்டம், கொத்தங்குடி, அரசூர், சங்கரன்பந்தல், இலுப்பூர் திருக்களாச்சேரி, ஆயப்பாடி, காட்டுச்சேரி, பொறையாறு, திருவிடைக்கழி, விசலூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் அதிக அளவில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர்.செம்பனார்கோவில் வட்டார பகுதியில் மட்டும் 2ஆயிரத்து 100ஹெக்டேர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
NEWS EDITOR : RP